News April 8, 2025
39 பந்துகளில் சதம்

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இளம் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். ஒருபுறம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்து கொண்டிருக்க, மறுபுறம் ப்ரியான்ஷ் 39 பந்துகளில் 102 ரன்களை கடந்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதில், 7 ஃபோர்களும் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது சதத்தை பஞ்சாப் அணியின் ஓனர் ப்ரீத்தி ஜிந்தா துள்ளிக் குதித்து கொண்டாடினார்.
Similar News
News November 29, 2025
சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்கும்!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு சற்றும் சளைக்காமல் மக்கள் பணி செய்யும் கட்சி தமாகா என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். 4 மாதங்களாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தமாகாவின் குரல் சட்டப்பேரவையில் நிச்சயமாக ஒலிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். 11 ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் தமாகா கட்சி குரல் கொடுத்து வருவதாகவும் ஜிகே வாசன் குறிப்பிட்டார்.
News November 29, 2025
சச்சின்-டிராவிட் சாதனை முறியடிக்கப்படுமா?

IND vs SA இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 30 முதல் தொடங்குகிறது. ராஞ்சியில் நடைபெறும் முதல் போட்டியில் ரோஹித்-கோலி ஜோடி, சச்சின்-டிராவிட் ஜோடி சாதனையை முறியடித்து வரலாறு படைக்க உள்ளனர். இதுவரை, இந்த 2 ஜோடிகளும், 391 சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிக சர்வதேச போட்டிகளில் ஒன்றாக விளையாடிய ஜோடி என்ற பெருமையை ரோஹித் & கோலி பெறுவார்கள்.
News November 29, 2025
ராசி பலன்கள் (29.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


