News October 11, 2025
இந்தியாவுக்காக சதம்.. டாப்பில் கில்!

இந்தியாவுக்காக WTC தொடரில் அதிக சதங்களை அடித்த வீரராக சுப்மன் கில் மாறியுள்ளார். அவர் 71 இன்னிங்ஸில் 10 சதங்களை அடித்துள்ளார். 2-வது இடத்தில் ரோஹித் சர்மா (9 சதங்கள்), 3-வது இடத்தில் ஜெய்ஸ்வால் (7 சதங்கள்) உள்ளனர். அதே நேரத்தில், ஒரு ஆண்டில் இந்திய கேப்டனாக 5 சதங்களை அடித்த கோலியின் சாதனையையும் கில் இன்று சமன் செய்துள்ளார். இருப்பினும், இச்சாதனையை கோலி இரு முறை (2017, 2018) படைத்துள்ளார்.
Similar News
News October 11, 2025
பழைய போன் யூஸ் பண்றீங்களா? கவனமா இருங்க!

பல நேரங்களிலும் போன் திடீரென வெடித்து சிதறும் சம்பவங்களை கேள்வி பட்டிருப்போம். அவை அனைத்தும் பெரும்பாலும் போன் பேட்டரியுடன் தொடர்புடையதாகவே இருக்கும். உண்மையில் ஒரு போனின் பேட்டரியை நீண்ட காலமாக உபயோகப்படுத்துவதால், அவை சூடாகி வெடித்து சிதறும் ஆபத்துக்கள் உள்ளன. எனவே, கண்டிப்பாக போனை குறைந்தது 3- 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிவிடுங்கள். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News October 11, 2025
தீபாவளிக்கு 9 நாள்கள் விடுமுறை

தீபாவளிக்கு எக்ஸ்ட்ரா 2 நாள் லீவு கேக்கலாம்னு நாம யோசிக்கும் போது, கம்பெனியே சம்பளத்தோடு 9 நாள் லீவு கொடுத்தா எப்படி இருக்கும்? டெல்லியில் உள்ள Elite Marque நிறுவன சி.இ.ஓ, தன் அலுவலக ஊழியர்களுக்கு அக்.18 முதல் 26 வரை 9 நாள் லீவு கொடுத்து, குடும்பத்துடன் கொண்டாடுங்கள் என அறிவித்தது, தற்போது SM-ல் வைரலாகியுள்ளது. இதற்கு ‘இவரல்லவா பாஸ்’ என பலரும் கமெண்ட் செய்கின்றனர். உங்க ஆபீசில் எத்தன நாள் லீவு?
News October 11, 2025
தீபாவளிக்கு கருப்பு பட பாடல்: RJ பாலாஜி

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் தீபாவளி ரிலீஸாக வர வேண்டிய நிலையில், CG பணிகளால் தள்ளிப்போனதாக RJ பாலாஜி தெரிவித்துள்ளார். தயாரிப்பாளரை படம் மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ள அவர், கிட்டத்தட்ட படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்றும் சரவெடி அப்டேட்டை கொடுத்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.