News August 5, 2024

+2 படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,006 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்களுக்கு 18 – 30 வயதுக்குட்பட்ட +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு <>https://ssc.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும்.

Similar News

News January 21, 2026

அடுத்தடுத்து இணைந்தனர்.. செங்கோட்டையன் அதிர்ச்சி

image

அதிமுகவில் இருப்பவர்களை தவெகவுக்கு அழைத்துவரும் அசைன்மென்ட்டை கையில் எடுத்திருக்கிறார் செங்கோட்டையன். ஆனால் இதில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், KAS பேச்சுவார்த்தை நடத்திய மருது அழகுராஜ், சின்னசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் செங்கோட்டையன் சற்றே அதிர்ச்சியில் இருப்பதாக பேசப்படுகிறது.

News January 21, 2026

NDA கூட்டணியில் இணைந்த TTV… EPS மிஸ்ஸிங்!

image

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்து அவர் முன்னிலையில் <<18913412>>NDA கூட்டணியில் TTV தினகரன் <<>>இணைந்துள்ளார். சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அங்கு மத்திய அமைச்சர் L முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக கட்சி தலைவர்கள் மட்டுமே இருந்தனர். எனினும் கூட்டணியின் முக்கிய தலைவரான EPS உள்ப்ட அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

News January 21, 2026

அச்சச்சோ.. PAK பாதுகாப்பு அமைச்சருக்கே இந்த நிலையா!

image

ஊரெங்கும் விளம்பரங்களும் போஸ்டர்களும் அடிக்கப்பட கோலாகல வரவேற்புடன் பாக். பாதுகாப்பு துறை அமைச்சர், ‘Pizza Hut’ கடையை திறந்து வைக்கிறார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த கடை தங்களுடையது அல்ல என ‘Pizza Hut’ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது. இச்செய்தி வெளியானவுடன், பாக். பாதுகாப்பு துறை அமைச்சரை இவ்வளோ ஈசியா ஏமாத்திட்டாங்களே என சர்வதேச அளவில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

error: Content is protected !!