News April 13, 2024
12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3712 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 27 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பணியிடத்தை பொறுத்து ஊதியம் ரூ.20,000 – 80,000 வரை வழங்கப்படும். இதற்கு <
Similar News
News November 21, 2025
நகைக் கடன் தள்ளுபடியா? தமிழக அரசு திட்டம்

2021-ஐ போலவே 2026 பேரவைத் தேர்தலிலும் கூட்டுறவு நிறுவனங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இதனிடையே, 31.03.21 வரை நகைக் கடன் பெற்றிருந்த 11.70 லட்சம் பயனாளிகளுக்கு நிலுவையில் இருந்த ₹6,000 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நிலுவையில் உள்ள நகைக் கடன்கள் எவ்வளவு என்ற பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாம்.
News November 21, 2025
மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும்: ராமதாஸ்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். திட்டம் தொடர்பான அறிக்கையை 2024-ல் அனுப்பிய தமிழ்நாடு அரசு, அதற்கான பூர்வாங்க பணிகளையும் தொடங்கியுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, அதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
News November 21, 2025
‘சிக்கன் 65’ பெயர் வந்தது எப்படி தெரியுமா?

அசைவ பிரியர்களின் விருப்பமான உணவு ‘சிக்கன் 65’. அதை விரும்பி சாப்பிடும் பலருக்கும் அதன் பெயர் காரணம் தெரியாது. உண்மையில் இந்த பெயர் வந்தது தமிழகத்தில் இருந்து தான். 1965-ல் சென்னை புஹாரி ஹோட்டல் உரிமையாளர் AM புஹாரி தான், இதை முதலில் அறிமுகப்படுத்தினார். மசாலாவில் ஊறவைத்து பொறித்த கோழிக்கறியை புதிய டிஷ் ஆக அறிமுகம் செய்த அவர், அந்த ஆண்டை வைத்து ‘சிக்கன் 65’ என்று குறிப்பிட அது பிரபலமாகிவிட்டது.


