News April 2, 2024
கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு முயற்சி

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து திரும்ப பெற மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை அளித்துள்ள பேட்டியில், “கச்சத்தீவு, இந்தியாவுக்கு மீண்டும் வேண்டும். இதுவே பாஜகவின் நிலைப்பாடு. இந்திய மீனவர் நலனைக் காக்க, கச்சத்தீவை மீண்டும் பெற மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 31, 2025
கரூர்: குடும்ப தகராறால் விபரீத முடிவு

கரூர் மாவட்டம் K. பரமத்தி அருகே, குவாரியில் மெக்கானிக்காக பணியாற்றும் மணிகண்டன் என்பவர், நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இந்த விஷயம் அறிந்து மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர், நேற்று வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
News October 31, 2025
INDIA – USA: 10 ஆண்டு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.
News October 31, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.


