News February 11, 2025
நகை அடகு நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள், RBI விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். கடன் நிறுவனங்கள் அனைத்துக்குமே ஒரே மாதிரியான விதிமுறைகளைத் தான் RBI வகுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நேரில் வராவிட்டாலும், நகை மதிப்பீடு முழுமை அடையாவிட்டாலும் ஏலம் விட முடியாது என்றார்.
Similar News
News March 3, 2026
BREAKING: விஜய் அறிவித்தார்

நாளை தஞ்சையில் நடக்கும் தவெகவின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு QR அனுமதி சீட்டு பெற்றவர்கள்(4,900 பேர்) மட்டுமே வரவேண்டும் என விஜய் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி மாணவர்கள் கூட்டத்திற்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், கூட்டம் நடைபெறும் இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு, நிர்வாகிகளுக்கு தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News March 3, 2026
அபிஷேக்… உங்கள் திறமை எங்கும் போகாது: பாண்டிங்

நடப்பு டி20 WC-ல் 6 போட்டிகளில் விளையாடி 3 டக் அவுட் உள்பட வெறும் 80 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் சர்மா தடுமாறி வருகிறார். இந்நிலையில், சில நேரங்களில் ஒரு சிறிய சரிவை சந்திக்கும்போது, தினமும் ஒன்றரை மணி நேரம் வலைபயிற்சியில் ஈடுபடுவது எப்போதும் சிறந்ததல்ல என்றும், மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பது அவசியம்; உங்கள் திறமைகள் எங்கும் செல்லாது எனவும் அபிஷேக்கிற்கு பாண்டிங் அறிவுறுத்தியுள்ளார்.
News March 3, 2026
பள்ளிகள் 10 நாள்கள் லீவு.. அரசின் கூடுதல் குட் நியூஸ்

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த முறை அதிக நாள்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். வழக்கமாக 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24-ம் தேதிக்குள் ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இம்முறை ஏப்., 2-ம் வாரத்திற்குள் தேர்வுகள் முடிவடையுமாம். இதனால், மேலும் 10 நாள்கள் வரை விடுமுறை கிடைக்கும். SHARE IT


