News April 18, 2024
மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, வேலைவாய்ப்பின்மை மிக மோசமான அளவில் உயர்ந்துள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாததால், அரசுப் பணிக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார்.
Similar News
News November 11, 2025
பொதுச் சின்னத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ECI-யிடம் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதேசமயம் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இந்நிலையில் 2026 தேர்தலுக்காக பதிவு செய்த கட்சிகள், நாளை முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என ECI தெரிவித்துள்ளது.
News November 11, 2025
நிக்கோலா டெஸ்லா பொன்மொழிகள்

*உள்ளுணர்வு என்பது அறிவை மீறிய ஒன்று. *பெரும்பாலானவர்கள் வெளி உலக சிந்தனையிலேயே மூழ்கியுள்ளனர், அதனால் தங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக மறந்துவிடுகிறார்கள். *தனியாக இருங்கள், அதுவே கண்டுபிடிப்பின் ரகசியம். தனியாக இருங்கள், அப்போதுதான் யோசனைகள் பிறக்கும். *நாம் அனைவரும் ஒன்று. அகங்காரங்கள், நம்பிக்கைகள் மற்றும் அச்சங்கள் மட்டுமே நம்மைப் பிரிக்கின்றன.
News November 11, 2025
வாசிங்டன் சுந்தர் மீது கண் வைத்த CSK.. கறார் காட்டும் GT

அஸ்வினின் ஓய்வு மற்றும் சஞ்சு சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுப்பதற்கு மத்தியில், ஸ்பின்னர் + ஃபினிஷர் இல்லாமல் <<18231489>>CSK<<>> திண்டாடி வருகிறது. அந்த வகையில், GT-ன் இளம் ஆல்ரவுண்டரான வாசிங்டன் சுந்தர் மீது CSK கண் வைத்துள்ளது. இது தொடர்பாக, GT-யுடன் பேச்சுவார்த்தை நடந்த, அந்த அணி நிர்வாகம் கறாராக மறுத்துவிட்டதாம். தற்போதைய நிலையில், ஆப்கனின் நூர் அகமது மட்டுமே CSK-ல் உள்ள முன்னணி ஸ்பின்னர்.


