News November 24, 2024
தக்காளி வீணாவதை தடுக்க மத்திய அரசு திட்டம்

தக்காளி வீணாவதைத் தடுக்க இதுவரை பெறப்பட்ட 1,376 யோசனைகளில் 28 யோசனைகளை நடைமுறைப்படுத்த நுகர்வோர் விவகாரத் துறை முடிவெடுத்துள்ளது. நாட்டில் ஆண்டுக்கு 2 கோடி மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தியாகும் நிலையில், 1% மட்டுமே பதப்படுத்தப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளில் 60 -70%ஆக உள்ளது. இந்நிலையில், தக்காளி வீணாவதை தடுக்கும் வகையில் மத்திய அரசு நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
‘கூலி’ படைத்த சரித்திர சாதனை

வெளிநாட்டு ரிலீஸில் ‘கூலி’ படம் ஆல்-டைம் ரெக்கார்ட் செய்துள்ளது. இப்படம், வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிக வசூல் செய்த ($3,042,756= ₹24.26Cr) தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதை விநியோக நிறுவனமான பிரத்யங்கிரா சினிமாஸ் தன் X பக்கத்தில் அறிவித்துள்ளது. ரஜினி – லோகேஷ் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. நீங்கள் பார்த்துவிட்டீர்களா? படம் எப்படி?
News August 14, 2025
வேற லெவலில் உருவாகும் SK படம்: வெங்கட் பிரபு அப்டேட்

சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படம் குறித்த தகவலை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இதுவரை SK நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்திற்கான திரைக்கதை பணிகள் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வித்தியாசமான கதையம்சத்தில் இப்படம் இருக்கும் எனவும், அதே சமயம் அனைவரும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
News August 14, 2025
மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நாளை டெபாசிட்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை(KMUT) திட்டத்தின் 24-வது தவணை ₹1,000 பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நாளை(ஆக.1 5) செலுத்தப்பட உள்ளது. 1.15 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15-ம் தேதி வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. நாளை பொது விடுமுறை என்பதால் இன்றே பணம் வரவு வைக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வழக்கம்போல் நாளையே வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.