News March 13, 2025
ரூ.4,386 கோடி மோசடி தடுப்பு: மத்திய அரசு

ரூ.4,386 கோடி மோசடி தடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் தாக்கல் செய்துள்ள பதிலில், மோசடி குறித்து தொலைபேசி மூலம் 13.36 லட்சம் புகார்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7.81 லட்சம் சிம்கார்டுகளின் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
உங்கள் செல்போனில் உடனே இதை பாருங்க

➤Settings-ல் About Device ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤Version என்ற ஆப்ஷன் வரும், அதற்குள் சென்றால் Version Number இருக்கும் ➤அதை க்ளிக் செய்தால் Developer Option Enable ஆகும் ➤மீண்டும் Settings-க்கு சென்று Additional Settings-ஐ க்ளிக் பண்ணுங்க ➤Developer Option-ஐ க்ளிக் பண்ணி APPS ஆப்ஷனுக்குள் செல்லவும் ➤Dont Keep Activities என்ற செட்டிங்கை ON பண்ணா Bg-ல் செயலிகள் இயங்காது. போனும் Hang ஆகாது. SHARE.
News April 6, 2026
வடகொரியாவிடம் மன்னிப்பு கேட்ட தென்கொரியா

கடந்த ஜனவரியில் தென் கொரியாவில் இருந்து வடகொரியாவுக்கு ட்ரோன் ஒன்று ஏவப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இது அரசுக்கு தெரியாமல் தேசிய புலனாய்வு ஊழியர் ஒருவரும் ராணுவ அதிகாரியும் சேர்ந்து நடத்திய தனிப்பட்ட தாக்குதல் என தெரியவந்தது. இந்நிலையில், சிலரின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட ராணுவ பதற்றத்திற்கு தென்கொரிய அதிபர் லீ வருத்தம் தெரிவித்துள்ளார்.
News April 6, 2026
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்.. EPS

மளிகை கடைகளில் விற்கப்படும் அரிசி போல, அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படும் என்று EPS வாக்குறுதி அளித்துள்ளார். அரிசி ஆலை அதிபர்களை அழைத்து, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்ததாக கூறிய அவர், அதிமுக ஆட்சி அமைந்ததும், எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, மக்களுக்கு தரமான அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், அதிமுகவின் பல்வேறு வாக்குறுதிகளையும் குறிப்பிட்டார்.<<-se>>#TNElection2026<<>>


