News October 28, 2024
மத்திய அரசு வேலை : இன்று இறுதி நாள்!

NTPC நிறுவனத்தில் காலியாகவுள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (அக்.28) கடைசி நாளாகும். ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பொறுப்பில் பணியாற்ற விரும்புவோர் careers.ntpc.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: B.Sc. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹40,000+ சலுகைகள். தேர்வு முறை: எழுத்து & நேர்காணல் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
Similar News
News August 24, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்
News August 24, 2025
‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.
News August 24, 2025
Farewell இன்றி ஜாம்பவான்கள் ஓய்வு

அஸ்வின், கோலியை தொடர்ந்து மற்றொரு இந்திய டெஸ்ட் ஜாம்பவான் புஜாரா Farewell போட்டி இன்றி ஓய்வை அறிவித்துள்ளார். அணியின் எதிர்காலம் கருதி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை பிசிசிஐ ஓரங்கட்டியது. இந்த நிலையில் புஜாரா ஓய்வு பெற்றுள்ளார். சமீபத்தில் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், கோலி, ரோஹித், புஜாரா ஆகியோரில் ஒருவருக்கு கூட பிசிசிஐ Farewell போட்டி நடத்தவில்லை. பிசிசிஐ அணுகுமுறை சரியானதா ?