News October 13, 2025
மத்திய அரசில் ₹55,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 474 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc (சில பாடப்பிரிவுகள் மட்டும்). வயது வரம்பு: 21 – 30. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மை தேர்வுகள், நேர்முக தேர்வு. சம்பளம்: ₹55,135 முதல். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.16. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 13, 2025
கரூர் துயரம்: ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன் என விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
News October 13, 2025
BREAKING: விஜய்க்கு முதல் வெற்றி

SC உத்தரவை அடுத்து, கரூர் விவகார வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. TN அரசின் கீழ் செயல்படும் அதிகாரிகள் கரூர் விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என TVK கோரிக்கை விடுத்ததுபோல் இத்தீர்ப்பு வந்துள்ளது. இது, விஜய் தரப்புக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
News October 13, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று SC தீர்ப்பளித்துள்ளது. கரூர் வழக்கை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் SIT குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.