News January 8, 2025
₹1.15 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசில் வேலை!

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 518 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிட்டர், ஆபரேட்டர், டெக்னீஷியன், செவிலியர், மருந்தாளர் உள்ளிட்ட பணிகளில் சேர விருப்பமுள்ளோர் ஜன. 21-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-35. சம்பளம்: ₹29,500 – ₹1,15,000. கல்வித்தகுதி: B.Sc., ITI, Diploma. கூடுதல் தகவல்களுக்கு https://nalcoindia.com/ சென்று பார்க்கவும்.
Similar News
News February 17, 2026
வேணுகோபால் வருகையால் சமரசம் ஏற்படுமா?

தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக காங்., தேசிய பொதுச்செயலாளர் KC வேணுகோபால் இன்று சென்னை வந்தடைந்தார். அவருக்கு செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரை கிரிஷ் ஷோடங்கர் பேசிவந்த நிலையில், வேணுகோபாலின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஸ்டாலின் உடனான சந்திப்பில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News February 17, 2026
பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

*பள்ளிக்கல்வித் துறை – ₹48,534 கோடி. *ஊரக வளர்ச்சித் துறை – ₹28,687 கோடி. *மருத்துவத் துறை – ₹22,090 கோடி. *போக்குவரத்துத் துறை – ₹13,062 கோடி. *உயர்கல்வித் துறை – ₹8,505 கோடி. *மாற்றுத் திறனாளிகள் நலத்துறை – ₹1,471 கோடி. *சிறப்பு திட்ட செயலாக்கத்துறை – ₹17,088 கோடி. *தொழிலாளர் நலத்துறை – ₹1,996 கோடி. *இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை – ₹718 கோடி ( அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட தரவுகளின்படி)
News February 17, 2026
மாற்றுத் திறனாளிகளின் உதவித் தொகை உயர்வு

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ₹1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளின் மாதாந்திர உதவித் தொகை ₹1,500-ஆக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இதுவரை இல்லாத வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 3,632 மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


