News April 2, 2025
தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்து விடுகிறது: CM

கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய <<15965956>>CM ஸ்டாலின்<<>>, இலங்கை அரசுடனான ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி மீனவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுவதாகவும், தமிழக மீனவர்களை மத்திய அரசு மறந்துவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
Similar News
News October 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 499 ▶குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ▶பொருள்:பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல. 
News October 25, 2025
NATIONAL ROUNDUP: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன.  *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
News October 25, 2025
உலகின் 8-வது கண்டம் தெரியுமா?

உலகின் 8வது கண்டத்தை புவியியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பின் பாறை மாதிரிகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருப்பதாகவும், புதிய கண்டத்தின் 94% பகுதிகள் நீருக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 49 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த கண்டத்துக்கு Zealandia என்றும் பெயர் வைத்துள்ளனர். SHARE IT


