News September 28, 2024

மத்திய அரசின் கடன் ₹176 லட்சம் கோடியாக அதிகரிப்பு

image

2024 ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், மத்திய அரசின் மொத்த கடன்தொகை ₹176 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மொத்த கடன் தொகையில் வெளிநாட்டு கடன் மதிப்பு ₹9.78 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் உள்நாட்டுக் கடன் தொகையில் அரசின் பத்திரங்கள் மூலம் ₹104.5 லட்சம் கோடியும், குறுகிய கால சேமிப்பு பாதுகாப்பு பத்திரங்கள் மூலம் ₹27 லட்சம் கோடி, கருவூல பத்திரம் மூலம் ₹10.5 லட்சம் கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

ரயில்வேயில் 2,569 பணியிடங்கள்.. Apply Now

image

இந்தியா முழுவதும் Junior Engineer, Depot Material Superintendent உள்ளிட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மொத்த பணியிடங்கள் 2,569. இதில், சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் 160 பணியிடங்கள். விருப்பமுள்ளவர்கள் 30.11.2025 வரை rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் தவறவிட வேண்டாம்.

News November 1, 2025

நாட்டை உலுக்கிய துயரம்.. PM மோடி உருக்கமாக இரங்கல்

image

ஆந்திராவின் <<18168033>>ஸ்ரீகாகுளம் காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயில்<<>> கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இத்தகைய துயர சம்பவத்தை அறிந்து இதயம் நொறுங்கிவிட்டதாக PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

News November 1, 2025

BREAKING: லெஜெண்ட் விடை பெற்றார்

image

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் போபண்ணா, கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவரது பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு 2019-ம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2024-ல் பத்மஸ்ரீ விருதையும் வழங்கியது.

error: Content is protected !!