News March 14, 2025
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு மத்திய அரசு கண்டிசன்

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவையை வழங்க ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. ஸ்டார்லிங்க் இந்தியாவில் கட்டுப்பாட்டு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசின் ஏஜென்சிகள் அழைப்புகளை இடைமறிப்பதை அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News March 15, 2025
CT வெற்றிக்கு மூவரே காரணம்: ரிக்கி பாண்டிங்

சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வதற்கு முக்கிய காரணம் 3 ஆல் ரவுண்டர்கள்தான் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ஹர்திக், அக்ஷர், ஜடேஜா போன்ற திறன்மிக்க மூவர் அணியில் இருந்ததால்தான் இந்தியாவுக்கு இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் கூறியுள்ளார். போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை என்ற குறை, வெளியில் தெரியவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 15, 2025
போர் நிறுத்தம்: PM மோடிக்கு நன்றி கூறிய புதின்

போர் நிறுத்தம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்த உன்னத பணிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுடனான மோதலை நிறுத்த தீவிர கவனம் செலுத்தியதற்காக டிரம்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர, புதினிடம் பிரதமர் மோடி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 15, 2025
அதிகரிக்கும் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள்!

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க அறிவிப்பு வெளியான நிலையில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலானோர் புதிதாக திருமணமானவர்கள், கடந்த முறை நில அளவு பிரச்னைகளால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ₹1,000 உரிமைத்தொகை பெற தகுதிகளை மறுவரையறை செய்து, அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளது. உங்கள் குடும்பத்தில் ₹1,000 வருகிறதா?