News August 10, 2025

‘உஜ்வாலா’ GAS மானியத்தில் மாற்றம் செய்த மத்திய அரசு

image

உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டருக்கான மானியம் இனி 9 மாதங்களுக்கு மட்டுமே தலா ₹300 வழங்கப்படவுள்ளது. 2023 அக். மாதம் முதல் மாதந்தோறும், 12 மாதங்களுக்கு தலா ₹300 வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 9 மாதங்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும். 2025 – 2026 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக ₹12,060 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10.33 கோடி குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருவது கவனிக்கத்தக்கது.

Similar News

News August 10, 2025

முதல் குழந்தை! 41% பேர் 35 வயதை கடந்தவர்கள்

image

முதல்முறையாக தந்தையாகும் ஆண்களின் வயது கணிசமாக அதிகரித்துள்ளதாக சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தொழில் முன்னேற்றம், உயர்கல்வி, பொருளாதார நிலை போன்ற காரணங்களால் ஆண்கள் குடும்பத்தை ஆரம்பிக்கும் முடிவை தாமதப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது 41% பேர் 35 வயதுக்கு மேல் முதல்முறையாக குழந்தை பெற்றுக்கொள்வது தெரியவந்துள்ளது. அதேநேரம் ஆண்களின் இந்த முடிவில் சில சவால்களும் இருக்கின்றன.

News August 10, 2025

3 நாள்கள் தொடர் விடுமுறை.. வேகமாக நடக்கும் புக்கிங்

image

வரும் <<17334045>>15, 16, 17-ம் தேதிகளில்<<>> பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாகும். இதனால், சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில், பஸ்களில் புக் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட எழும்பூர் – செங்கோட்டை, <>நாகர்கோவில் – தாம்பரம்<<>> ஸ்பெஷல் ரயில்களில் புக்கிங் முடிந்துவிட்டதால் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வேக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News August 10, 2025

இது நல்லதல்ல: திருமாவை எச்சரிக்கும் OPS

image

திராவிட அரசியலில் எம்ஜிஆர் பார்ப்பனியத்தை புகுத்தியதாக விமர்சித்த திருமாவுக்கு OPS கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயல‌லிதா குறித்த திருமாவளவனின் கருத்து அவருக்கு நல்ல‌தல்ல, அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது என்று எச்சரித்த OPS, கூடுதல் தொகுதிக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் திமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதாகவும், அதிமுக தலைவர்களை தாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!