News August 4, 2024
வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்?

வக்ஃப் சட்டத்தில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. சொத்துகள் மீதான வாரியத்தின் அதிகாரம், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிப்பு உள்ளிட்ட 40 திருத்தங்களுடன் புதிய சட்டத்தை கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வக்ஃப்
சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட, அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Similar News
News March 18, 2026
ஏன் அமித்ஷா அழைத்து பேசினார்? TTV

அதிமுக, அமமுகவை இணைக்க ஏன் பாஜக மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்பதற்கு TTV தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அண்ணன் – தம்பி இடையே பிரச்னை ஏற்பட்டால் ஊரில் உள்ள பெரியவர்கள் தீர்த்து வைப்பது போல, தன்னையும் EPS-ஐயும் அமித்ஷா சேர்த்து வைத்தாக அவர் கூறியுள்ளார். மேலும், இருகட்சிகளின் நலனை கருத்தில் கொண்டு அந்த கூட்டணியில் இணைந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News March 18, 2026
பெண்கள் வாக்கு திமுகவுக்கு இல்லை: தமிழிசை

தூத்துக்குடி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்காதது பெரும் அவலம் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். திமுகவின் ஆட்சியில் பெண்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் தேர்தலில் பெண்களின் ஓட்டு அவர்களுக்கு கிடைக்காது எனவும் கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்புக்கு CM ஸ்டாலின் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
News March 18, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 18, பங்குனி 4 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


