News August 8, 2024
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: அதிமுக

தமிழக மீனவர்கள் பிரச்னையை காது கொடுத்து கேட்பதில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். குஜராத் மீனவர்கள் பாதிக்கப்பட்டால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்துடன், கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு, இன்று வரை இரட்டை வேடம் போடுகிறது என சாடியுள்ளார்.
Similar News
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 6, 2025
எடையை குறைக்க உதவும் ‘கொத்தமல்லி’

சமையலில் மணம், சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. *கொத்தமல்லி இலையில் உள்ள குவர்செடின் எனும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது. *இதை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது *இதயம், தோல், மூளைக்கும் நல்லது.


