News December 11, 2024

தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது: சசி தரூர்

image

TN-க்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதியைத் தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக CONG MP சசிதரூர் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேரிடர் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், தமிழ் நாட்டில் பாதிப்பு கடுமையாக இருக்கிறது எனத் தெரிந்தும், மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக சாடியுள்ளார். பேரிடர் காலங்களில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குறை கூறியுள்ளார்.

Similar News

News August 27, 2025

பிரபல நடிகர் ஜாய் பானர்ஜி காலமானார்

image

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான ஜாய் பானர்ஜி(62) காலமானார். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், புகழ்பெற்ற மிலன் திதி, நாக்மதி, சாப்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பாஜகவில் இணைந்த இவர், 2014 லோக்சபா தேர்தலில் பிர்பும் தொகுதி, 2019 தேர்தலில் உலுபேரியா தொகுதியில் BJP சார்பில் போட்டியிட்டு TMC-யிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜாய் பானர்ஜி மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News August 27, 2025

இதுக்கு சரியான பதில் சொல்லுங்க பாப்போம்?

image

அடுத்தடுத்து நியூஸ் படிச்சி டயர்ட்டாகி இருக்கும் உங்களின் மூளையை வாங்க கொஞ்சம் சுறுசுறுப்பாக்குவோம். மேலே உள்ள படத்தில் இருக்கும் கேள்வியை கவனியுங்க. 1= 2, 4= 20, 6= 42, 9= 90, அப்போ 10= ? என்ன வரும் யோசிச்சு பாருங்க. HINT: இதில் 1=2 எப்படி வந்துச்சுன்னு மட்டும் யோசிங்க. மத்த நம்பர்களுக்கான பதில்கள் ஈசியாக கிடைச்சிடும். எத்தனை பேர் சரியா பதில் கமெண்ட் பண்றீங்க’னு பாப்போம்?

News August 27, 2025

தற்கொலை செய்ய டிப்ஸ் வழங்கிய ChatGPT

image

USA-ல் 16 வயது சிறுவனுக்கு பல்வேறு ஐடியாக்களை வழங்கி, தற்கொலைக்கு உதவியதாக, OpenAI மற்றும் அதன் CEO சாம் ஆல்ட்மேன் மீது பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்கொலை முயற்சி தோல்வி அடைந்தால் அதை எப்படி மறைப்பது, தற்கொலை கடிதத்தை எப்படி எழுதுவது என பல டிப்ஸ்களை ChatGPT வழங்கியதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு நெறிமுறைகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.

error: Content is protected !!