News May 17, 2024
ஆல் இந்தியா ரேடியோவில் சென்சார்

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவில் இஸ்லாமியர், சர்வாதிகார ஆட்சி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதித்துள்ளதாக சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலையொட்டி அரசியல் தலைவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில், பேட்டி அளிக்கும்போது, திவால் அரசு, கொடூர சட்டங்கள் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்க்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறினார்.
Similar News
News January 14, 2026
Cinema Roundup: ‘போர்’ முரசு ஒலிப்பாரா தனுஷ்?

*அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தின் 2-ம் பாடல் வெளியானது. *பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வரும் 23-ம் தேதி ரிலீசாகிறது. *தனுஷ் நடிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் இயக்கும் ‘D54’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என தகவல். *‘மரகத நாணயம் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. *அல்லு அர்ஜுன் -லோகேஷ் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.
News January 14, 2026
தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(ஜன.14) சற்று குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $11 குறைந்து $4,597-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.
News January 14, 2026
போகி பண்டிகையில் இந்த வழிபாடு கட்டாயம்!

போகி பண்டிகை நாளான இன்று, அதிகாலையில் பலரும் வீட்டு வாசலில் பழைய பொருள்களை தீயில் இட்டு கொண்டாடி இருப்பீர்கள். இத்துடன் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி, மழைக்கு அதிபதியான இந்திர தேவனையும் வழிபட வேண்டும். அதே நேரத்தில், குலதெய்வ வழிபாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏதேனும் வேண்டுதல் இருந்தால், ₹1 நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து குலதெய்வத்தின் முன் வைத்து வழிபடலாம். SHARE IT.


