News April 8, 2025
சிமெண்ட் விலை உயர வாய்ப்பு!

சிமெண்ட் விலை இம்மாதம் உயர வாய்ப்புள்ளதாக நுவாமா வெல்த் (Nuvama Wealth) நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு தொடக்கத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சிமெண்ட் விலை சற்று உயர்ந்த நிலையில், கிழக்கு மாநிலங்களில் கடந்த மாதம் மூட்டைக்கு ₹5 – ₹7 வரை குறைந்தது. இந்நிலையில், செலவின அதிகரிப்பு காரணமாக மீண்டும் இம்மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹20 வரை உயர வாய்ப்புள்ளதாக நுவாமா கணித்துள்ளது.
Similar News
News August 31, 2025
திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் : அண்ணாமலை

டிஜிபி நியமனத்தில் திமுக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தனது X தள பதிவில் அவர், <<17573069>>டிஜிபி நியமனத்தில் <<>>உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். பொறுப்பு ஜிடிபி நியமனம் மூலம் அப்பதவிக்கு தகுதியான 6 பேரின் பதவி உயர்வை திமுக தட்டிப்பறித்திருப்பதாக சாடியிருக்கிறார். திமுகவின் ஆட்டம் விரைவில் முடிவடையும் என்றும் எச்சரித்துள்ளார்.
News August 31, 2025
டிரம்ப் இறந்துவிட்டார்?.. CLARITY

X-தளத்தில் <<17563319>>TRUMP IS DEAD<<>> என்ற ஹேஷ்டேக் இன்று உலகளவில் டிரெண்டானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமெரிக்க அதிபர் மாளிகை, டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் உள்ளதாகவும், விர்ஜீனியாவில் கோல்ப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் கூறி ஒரு போட்டோவையும் பகிர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே டிரம்ப் வெளியில் வராததால், அவர் இறந்துவிட்டதாக நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டுவிட்டனர்.
News August 31, 2025
காதல் முடிந்தது.. இப்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’

‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கியவர் இளன். தற்போது அவரே இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாள்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கான முன் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், இப்படத்திற்கு ‘பியார் பிரேமா கல்யாணம்’ என தலைப்பு வைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை AGS எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.