News April 17, 2024
செல்ஃபோன் பயன்படுத்தினால் ஆண்மை குறையும்

புகைப்பிடித்தல், மது அருந்துதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால், ஆண்களுக்கு விந்தணுவில் டிஎன்ஏ பாதிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களால், அவர்களுடைய மனைவிக்கு கருச்சிதைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Similar News
News August 14, 2025
ரெஸ்ட் எடுங்க பாஸ்…ஆனால் இப்படி எடுக்காதீங்க!

ஓய்வு நேரம் குறைந்தால், அதிக அளவு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைவாக ஓய்வு கொண்டவர்கள் குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனர் என கூறும் அந்த ஆய்வு, அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பது உடல்/மன நலனை பாதிக்கும் என்கிறது. மிக அதிக ஓய்வு பிபி, மன அழுத்தம், துக்கமின்மை, அலர்ஜி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.
News August 14, 2025
ஒரே நாளில் ₹130 கோடிக்கு இறைச்சிகள் விற்பனை

வட இந்தியாவில் இந்துக்கள் சிவனுக்காக அசைவம் சாப்பிடாமல் 1 மாதம் சவான் விரதம் இருப்பர். ஆக., 9-ல் விரதம் முடிந்த கையோடு, கறி கடைகளில் மக்கள் கூட்டம் குவிந்துள்ளது. விளைவாக, ஒரே நாளில் ₹130 கோடிக்கு ஆடு, கோழி இறைச்சிகள் பீகாரில் விற்பனையாகியுள்ளது. விரதம் இருந்த காலக்கட்டத்தில் உ.பி.யில் அசைவ உணவகங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News August 14, 2025
‘கூலி’ படைத்த சரித்திர சாதனை

வெளிநாட்டு ரிலீஸில் ‘கூலி’ படம் ஆல்-டைம் ரெக்கார்ட் செய்துள்ளது. இப்படம், வட அமெரிக்காவில் பிரீமியர் ஷோவில் அதிக வசூல் செய்த ($3,042,756= ₹24.26Cr) தமிழ்ப் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதை விநியோக நிறுவனமான பிரத்யங்கிரா சினிமாஸ் தன் X பக்கத்தில் அறிவித்துள்ளது. ரஜினி – லோகேஷ் காம்போவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. நீங்கள் பார்த்துவிட்டீர்களா? படம் எப்படி?