News October 15, 2025

செல்போன் ரீசார்ஜ்.. அதிரடி ஆஃபர்

image

தீபாவளியை முன்னிட்டு ₹1 ரீசார்ஜ் திட்டத்தை BSNL அறிமுகப்படுத்தியுள்ளது. ₹1 ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வேலிடிட்டியுடன் நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்கால், நாள் ஒன்றுக்கு 100 SMS-ம் அனுப்பலாம். அக்.15 முதல் நவ.15 வரை இலவசமாக சிம்கார்டை வாங்கி ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் என BSNL தெரிவித்துள்ளது.

Similar News

News October 15, 2025

இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்… HAPPY NEWS!

image

2030-ல் காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக குஜராத்தின் அகமதாபாத் நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நவ.26-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடைசியாக 2010-ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றது.

News October 15, 2025

17-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

image

ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 22-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். இதனிடையே வரும் 22-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 22-ம் தேதி ஆன்லைன் முன்பதிவுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News October 15, 2025

ஐநாவில் தொடர்ந்து முக்கியத்துவம் பெறும் இந்தியா

image

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு 7-வது முறையாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2026 முதல் 2028 வரை, 3 ஆண்டுகளுக்கு இந்தியா பணியாற்றும். மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் மீது இந்தியா கொண்டுள்ள ஈடுபாட்டை இது பிரதிபலிக்கிறது என இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி.ஹரீஷ் பதிவிட்டுள்ளார். மேலும், இக்குழுவில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!