News October 1, 2025
செல்போன் ரீசார்ஜ் 3 மாதம் இலவசம்!.. ALERT

இந்தியர்கள் அனைவருக்கும் 3 மாதங்களுக்கு இலவச செல்போன் ரீசார்ஜ் திட்டத்தை PM மோடி தொடங்கி வைத்துள்ளதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம்(PIB Factcheck), இது மோசடி எனத் தெரிவித்துள்ளது. அவ்வாறு வரும் மெசேஜ் லிங்குகளை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உஷார் மக்களே!
Similar News
News March 11, 2026
‘சிலிண்டர் தட்டுப்பாடு’ பயம் வேண்டாம்: PM மோடி

கொரோனா பேரிடர் நெருக்கடியை போல சிலிண்டர் தட்டுப்பாட்டில் இருந்து இந்தியா மீளும் என PM மோடி கூறியுள்ளார். மேற்கு ஆசிய போர் தொடர்பான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், போரினால் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பயப்படவோ, பீதியடையவோ தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.
News March 11, 2026
BREAKING: விவசாயிகளுக்கு ₹2,000.. அரசு அறிவிப்பு

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை நாளை மறுநாள் (மார்ச் 13) விடுவிக்கப்படும் என சற்றுமுன் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான ₹19,000 கோடியை PM மோடி விடுவிக்க உள்ளார். இதன்மூலம், 9.35 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ₹2,000 டெபாசிட் செய்யப்பட உள்ளது. SHARE IT
News March 11, 2026
மதுவை திணிக்கும் திமுக அரசு: அன்புமணி

தமிழகத்தில் மது கலாசாரத்தால் குற்றங்கள் அதிகரித்து விட்டதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சி NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். திமுக அரசு மதுவை விற்கவில்லை மாறாக திணிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், மதுவால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.


