News April 18, 2025
செல்பாேன் கட்டணம் மீண்டும் உயருகிறது.. எவ்வளவு?

செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில், அந்த நிறுவனங்கள் வரும் நவ.-டிச. மாதங்களில் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10%-20% உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி விரிவாக்க செலவீனத்தை ஈடுகட்டவும், லாபத்தை அதிகரிக்கும் நோக்கிலும் இக்கட்டண உயர்வுக்கு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 26, 2025
ஜன.20-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20-ல் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கவர்னர் ஒப்புதலுடன் காலை 9:30 மணிக்கு பேரவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார். அன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
News December 26, 2025
அஜிதா விவகாரத்தில் விஜய் செய்ய தவறியது: தமிழிசை

பெண்களுக்கு அரசியல் என்பது எப்போதும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தவெக நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றதை பற்றி பேசிய அவர், விஜய் முன்னதாகவே அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும் என பேசியுள்ளார். மேலும், அஜிதா தற்கொலைக்கு முயன்றது கவலையளிப்பதாகவும் அவரது போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
மீண்டும் சாதிப்பாரா குகேஷ்?

FIDE உலக ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் இன்று தொடங்குகிறது. மின்னல் வேக காய் நகர்த்தலுக்கு பெயர்போன இப்போட்டியில் 8 முறை பிளிட்ஸ் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி ஆகியோர் களமிறங்குகின்றனர். பட்டம் வெல்வோருக்கு ₹74 லட்சம் உட்பட மொத்தம் ₹10 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


