News December 4, 2024
EXAM ஹாலுக்குள் செல்போனுக்குத் தடை: TNPSC

TNPSC குரூப்-1 மெயின் தேர்வுகள் டிச. 10-13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு TNPSC அறிவுரை வெளியிட்டுள்ளது. தேர்வறைக்குள் செல், பேஜர், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச், மெமரி பவர் காெண்ட வாட்ச்-மோதிரம், ப்ளூடூத், புத்தகம், நோட்டுகள், கைடுகள் கொண்டு வரக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. தேர்வறைக்குள் பிறரிடம் பேசவோ, பிறரை பார்த்து எழுதவோ கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 9, 2025
டிசம்பர் 9: வரலாற்றில் இன்று

*உலக ஊழல் எதிர்ப்பு நாள். *1946 – இந்திய அரசியலமைப்பை வரையறை செய்ய, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது. *1946 – சோனியா காந்தி பிறந்தநாள். *1979 – பெரியம்மை வைரஸ் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. *1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 10 திமுக MLA-க்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
News December 9, 2025
இந்தியாவில் மீண்டும் தாக்குதல்.. உளவுத்துறை அலர்ட்

இந்தியாவில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த JeM, LeT தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சமீபத்தில் கூட்டம் நடத்தி முடிவு செய்துள்ளதாகவும், PoK வழியாக நாட்டிற்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
News December 9, 2025
RO-KO நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை: அஸ்வின்

2027 ODI உலகக்கோப்பை வரை ரோஹித், கோலி நீடிப்பார்களா என்ற கேள்வி முன்வைக்கப்படுவதை அஸ்வின் கடுமையாக சாடியுள்ளார். 2 மூத்த வீரர்களும் இன்னும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. அவர்கள் நிரூபிக்க ஒன்றும் மிச்சமில்லை. அவர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த கிரிக்கெட் அடுத்த தலைமுறையினருக்கு பாடமாக இருக்கும் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


