News November 22, 2024
செல் நம்பர் போதும்.. அத்தனை படங்களும் இலவசம்

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் கட்டணத்தை வசூலித்து கொண்டே அனைத்து சேவைகளையும் அளிக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் WAVES என்ற புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் நமது செல்போன் எண்ணை உள்ளிட்டு நுழைந்தால் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் படம், வெப் சீரீஸ், டிவி நேரலை இலவசமாக காணலாம். SHOPPING சேவையையும் இத்தளம் அளிக்கிறது.
Similar News
News November 20, 2025
சபரிமலையில் குழந்தைகளை பாதுகாக்க VI Band அறிமுகம்

சபரிமலைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்பவர்களுக்கு நெரிசலால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் குழந்தைகள் காணாமல் போனால் கண்டறிய கேரள போலீஸ், வோடபோன்-ஐடியா(VI) உடன் இணைந்து Safety Bands-ஐ கொண்டு வந்துள்ளது. இதனை VI கடைகள் அல்லது ஆன்லைனிலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள டிஜிட்டல் குறியீட்டை வைத்து குழந்தைகள் காணாமல் போனால் எளிதாக கண்டுபிடிக்க முடியுமாம்.
News November 20, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 525
▶குறள்:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
▶பொருள்: வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
News November 20, 2025
மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறு: நயினார்

மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு குறித்து <<18327298>>CM ஸ்டாலின்<<>> வைத்த குற்றசாட்டுக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். திட்ட அறிக்கையில், 2011 மக்கள்தொகை கணக்கீட்டை குறிப்பிட்டது, திட்டத்துக்கான சரியான நோக்கம் இடம்பெறாதது உள்ளிட்ட தவறுகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அறிக்கையில் மெட்ரோவிற்கான தேவையை நியாயப்படுத்தக்கூட TN அரசு முன்வரவில்லை எனவும் சாடியுள்ளார்.


