News May 20, 2024
ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள் (3)

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தனது மகன் அர்ஜுனுடன் சென்று வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து நடிகைகள் ஹன்சிகா, தீபிகா படுகோன், ஸ்ரேயா, நக்மா, ஈஷா தியோல், கஜோல், வித்யா பாலன், ரன்வீர் சிங், அனுபம் கெர் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
Similar News
News February 19, 2026
பங்குச்சந்தையில் ₹7 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச்சந்தை 3 நாள் ஏற்றத்திற்கு பிறகு இன்று கடுமையாக சரிந்துள்ளது. லாப விற்பனை, அமெரிக்கா-ஈரான் பதற்றம், எண்ணெய் விலை உயர்வு ஆகியவை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தன. சென்செக்ஸ் 1,236 புள்ளிகள் சரிந்து 82,498 ஆகவும், நிஃப்டி 365 புள்ளிகள் சரிந்து 25,450 ஆகவும் உள்ளன. இன்ஃபி, டிசிஎஸ் தவிர மற்ற அனைத்து பங்குகளும் சரிந்தன. முதலீட்டாளர்களுக்கு ₹7 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
News February 19, 2026
நகைக் கடன்.. வெளியான புதிய தகவல்

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?
News February 19, 2026
FLASH: நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6:30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இதில், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், MP, MLA-க்கள் பங்கேற்க வேண்டும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். வரும் 23-ம் தேதி முதல் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் திமுகவினர் வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், அதுகுறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாம்.


