News May 20, 2024
ஜனநாயக கடமையாற்றிய பிரபலங்கள்

மக்களவைத் தேர்தலுக்கான 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். அந்தவகையில், மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், தமன்னா, சுகானா கான், நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
Similar News
News November 19, 2025
தருமபுரி: கஞ்சா ஆசாமிகளை போலீசார் வலைவீசி பிடிப்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் சுடுகாடு அருகே நேற்று (நவ.19) போலீ சார் ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார். அவரை போலீசார் துரத்தி பிடித்தனர். பின்னர், விசாரணையில் அவர் அரூரை சேர்ந்த தீப்பொறி (வயது 30) என்பதும், அவர் 500 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை அரூர் போலீசார் கைது செய்தனர்.
News November 19, 2025
நாளை… அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு!

அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ.10-ல் திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், dgedsection@gmail.com என்ற e-mail முகவரிக்கு நாளைக்குள் (நவ.20) தெரிவிக்க வேண்டும். இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசு மாதந்தோறும் தலா ₹1,500 வழங்க உள்ளது. SHARE IT.
News November 19, 2025
இந்திரா காந்தி பற்றி அறியாத தகவல்கள்

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று. அவரது குழந்தைப் பருவம் முதல் தேசத்தை வடிவமைத்த போர் முடிவுகள் வரை ஏராளாமான செயல்பாடுகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. அவற்றில் சிலவற்றை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் முதல்முறையாக தெரிந்து கொண்ட விஷயம் எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE


