News October 31, 2025

Celebrations with emotional.. இந்திய மகளிர் அணி கிளிக்ஸ்

image

ODI மகளிர் உலகக் கோப்பையில், ஆஸி.,க்கு எதிரான செமி ஃபைனல் போட்டியில் 127 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். ஃபைனலில் நுழைந்துவிட்டோம் என அறிந்த கடைசி பவுண்டரியை விளாசிய பிறகு, வீராங்கனைகளின் எமோஷனலான கொண்டாட்டத்திற்கு ஈடே இல்லை. அப்படியான எமோஷனல் போட்டோஸை swipe செய்து பாருங்கள். உங்கள் வாழ்த்துகளை லைக்ஸாக தெரிவியுங்கள்.

Similar News

News October 31, 2025

விஜய்யுடன் கூட்டணி பேச்சு இல்லை: EPS

image

தவெகவுடன் அதிமுக இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அதேபோல் தவெகவும் எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என EPS தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பின், TVK உடன் ADMK கூட்டணி வைக்க முயற்சிப்பதாக பேச்சு அடிப்பட்டது. அதேபோல், விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாக அமித்ஷாவும் பதிலளித்திருந்தார். இந்நிலையில் EPS இவ்வாறு பதிலளித்துள்ளார்.

News October 31, 2025

மரத்தில் காய்க்கும் தங்கம்.. நம்பலனாலும் நிஜம்தான்!

image

வடக்கு பின்லாந்தில் வளரும் Norway spruce மர இலைகளில் தங்க நானோ துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்பகுதிகளில் மண் & பாறைகளில் தங்கம் கரைந்து soluble ions வடிவில் உள்ளன. அவை நிலத்தடி நீராக மரத்தின் வேரை அடைந்து, மரத்தில் கலக்கின்றன. மரத்தில் உள்ளே Endophytic microbes, இந்த ions-ஐ தங்க நானோ துகள்களாக மாற்றி, இலைகளில் மிளர செய்கின்றன. இந்த மரத்துக்கு இப்போதே மவுசு எகிறியுள்ளது.

News October 31, 2025

BREAKING: நள்ளிரவில் விஜய்க்கு வந்த அதிர்ச்சி

image

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புஸ்ஸி N.ஆனந்துக்கு தகவல் கிடைத்ததும், பதறியடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார். விஜய்க்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!