News April 23, 2025

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை

image

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்றைய SRH Vs MI போட்டியின்போது வீரர்கள், நடுவர்கள் கருப்பு பட்டை அணிந்து களமிறங்குவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டி துவங்குவதற்கு முன்பு மெளன அஞ்சலி செலுத்தப்படும் என தெரிவித்துள்ள பிசிசிஐ, பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும், Cheers leaders கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளது.

Similar News

News December 7, 2025

புதுசா இருக்குண்ணே.. விரைவில் பராசக்தி கண்காட்சி?

image

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் ஆடியோ லாஞ்ச், ஜன., முதல் வாரத்தில் நடைபெறவுள்ளதாம். இந்நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட 1960 காலகட்ட பொருட்களின் மாதிரிகளை கண்காட்சியாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘தி வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என்ற பெயரில், டிச.16 முதல் ஒரு வாரத்துக்கு கண்காட்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

News December 7, 2025

நாளை பள்ளிகளுக்கு இங்கு விடுமுறை

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நாளை(டிச.8) காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்துள்ளார். இதனிடையே, டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்கும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விவரங்களை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.

News December 7, 2025

₹610 கோடியை பயணிகளிடம் திருப்பி கொடுத்த இண்டிகோ

image

விமான பயணிகளுக்கு பெரும் இடையூறாக மாறிய இண்டிகோ சேவை, படிப்படியாக<<18496873>>இயல்பு நிலைக்கு<<>> திரும்பி வருகிறது. இதனிடையே ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கான கட்டணத்தையும் அந்நிறுவனம் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. இதுவரை ₹610 கோடியை அந்நிறுவனம் திருப்பி செலுத்தியுள்ளது. மேலும் மீதமுள்ளவர்களுக்கு இன்று இரவுக்குள் பணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இண்டிகோ உறுதி அளித்துள்ளது.

error: Content is protected !!