News August 17, 2024
டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

டிமான்டி காலனி 2 படத்தின் வெற்றியை, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அருள்நிதி, பிரியா பவானிசங்கர் நடிப்பில் வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று வெளியான படங்களில், ஆதரவான விமர்சனத்தை டிமான்டி காலனி 2 பெற்றுள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திளைத்துள்ள படக்குழுவினர், இந்த வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்.
Similar News
News November 21, 2025
முடியாததை முடித்துகாட்டிய நாடுகள்

மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான திட்டங்களை பல வருடங்களாக செயல்படுத்த முடியாமல் தவிக்கும் நாடுகளுக்கு மத்தியில் சில நாடுகள் அசால்ட்டாக செய்து முடித்துள்ளன. இந்த நாடுகள், தைரியமான முடிவுகளை உறுதியாக கடைபிடித்ததன் மூலம் வெற்றியடைந்துள்ளன. அவை, எந்தெந்த நாடுகள், என்னென்ன செய்துள்ளன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 21, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தக நேர முடிவில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 89.46 ஆக சரிந்தது. நேற்றுடன் ஒப்பிடுகையில், இது 0.86% சரிவாகும். அதாவது, ஒரே நாளில் 67 பைசா சரிந்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்தது, ரிசர்வ் வங்கியின் ஆதரவு குறைந்தது போன்றவை இச்சரிவுக்கு காரணம். ரூபாய் மதிப்பு சரிவால், நமது இறக்குமதி செலவுகள் உயரும்.
News November 21, 2025
ஹலோ ஹலோ சுகமா.. ட்ரை பண்றீங்களா?

‘ஹலோ’ என்ற வார்த்தையை இன்று ஒரு சிறப்பு தினமாக கொண்டாடுகிறோம். 1973- ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் எகிப்து, சிரியா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரில், பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் ‘உலக ஹலோ தினம்’ என்பதை ஃபிரியன், மைக்கேல் சகோதரர்கள் அறிமுகப்படுத்தினர். இந்த நாளில், பிரிந்த உறவுகளிடம் கூட ஹலோ சொல்லி உறவை புதுமையாக்கலாம். நீங்கள் யாருக்கு ஹலோ சொல்ல போறீங்கனு கமெண்ட் பண்ணுங்க.


