News February 18, 2025
போர் நிறுத்தம் போதாது உத்தரவாதம் தேவை: மேக்ரான்

உக்ரைனில் அமைதி நீடிக்க வேண்டுமெனில் படையெடுப்பை ரஷ்யா முழுமையாக கைவிட வேண்டும் என ஃபிரான்ஸ் அதிபர் மேக்ரான் கேட்டுக் கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஃபோனில் ஆலோசனை நடத்திய அவர், பாதுகாப்பு நிலவரம் குறித்து கேட்டறிந்தார். உக்ரைன் மக்களின் வாழ்க்கைக்காக வலுவான பாதுகாப்பு உத்தரவாதத்தை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதும் அவசியம் என வலியுறுத்தினார்.
Similar News
News March 10, 2026
அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுத்த சீனா

ஈரானின் புதிய உச்சத் தலைவராக யார் வந்தாலும் குறிவைப்போம் என அமெரிக்கா, இஸ்ரேல் கூறும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்ற சீனா, ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு, பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. மேலும், அனைத்து தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
News March 10, 2026
சாதி, மதம் பார்த்து ஓட்டு போடாதீங்க: துரை வைகோ

சாதி, மதப் பெருமைகளை பேசுவதாலும், இன்னொரு சாதியை திட்டுவதாலும் எந்த பயனும் கிடையாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். சாதி, மதங்களை கடந்தும், அரசியல் வேறுபாடுகளை கடந்தும் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனக் கூறிய அவர், சாதி, மதம் பார்ப்பது மதிமுக வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஓட்டுப் போடாதீங்க; நல்ல தலைவர்களைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News March 10, 2026
துடிக்க துடிக்க கொலை செய்த இளம் நடிகை.. PHOTO

விழுப்புரத்தில் குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம் நடிகை பூஜா தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து, ஜெயக்குமாரை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


