News January 19, 2025

காஸாவில் போர் நிறுத்தம் அமல்

image

இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், 6 வார போர் நிறுத்தம் இந்திய நேரப்படி மதியம் 2.45 மணியளவில் காஸாவில் அமலாகியுள்ளது. ஹமாஸ் விடுதலை செய்ய உள்ள பிணைக் கைதிகளின் பட்டியலைப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் அமலானதை தொடர்ந்து காஸா மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

Similar News

News March 14, 2026

விடாப்பிடியில் பாஜக.. என்ன செய்யப் போகிறார் EPS?

image

NDA கூட்டணி ஆட்சி கிடையாது, அதிமுகவே ஆட்சியில் அமர வேண்டும் என்ற கருத்தில் EPS விடாப்பிடியாக உள்ளாராம். இதற்கு குறைந்தது 160 தொகுதிகளில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. ஆனால், அதிக தொகுதிகளை கேட்கும் பாஜக, அத்தொகுதிகளை தாங்களே பிற கட்சிகளுக்கு பிரித்தளிக்கிறோம் என்றும் கூறுகிறதாம். இது EPS-க்கு பிடிக்காததால் தான் அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறதாம்.

News March 14, 2026

தேமுதிகவால் விசிகவுக்கு வந்த சிக்கல்

image

தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுக்க நினைப்பதால், ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிகவுக்கு தொகுதிகள் குறைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால், இதற்கு இருகட்சிகளும் இசைவு கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திருமாவளவன் கேட்ட 10 தொகுதிகளில் 5 சீட் மட்டுமே கொடுக்க திமுக முடிவு செய்துள்ளதால், விசிகவினர் அதிருப்தியில் உள்ளனராம்.

News March 14, 2026

திமுக மா.செ.,க்கள் கூட்டம் தள்ளிவைப்பு

image

திமுக மா.செ.,க்கள் கூட்டம் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், மார்ச் 16-ல் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. நாளை தமிழக தேர்தல் தேதி வெளியாக அதிக வாய்ப்புள்ளதால், இந்த தள்ளிவைப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்டு, மொத்தமாக மா.செ.,க்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கலாம் என்றும் திமுக நினைக்கிறதாம்.

error: Content is protected !!