News January 8, 2025
CBSEல் வேலைவாய்ப்பு… மாதம் ₹1 லட்சம் வரை சம்பளம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)ல் Superintendent, Junior Assistant பதவிகளுக்கான 212 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹19,900 – ₹1,12,000 வரை. <
Similar News
News January 19, 2026
EPS-ஐ சந்தித்தார் தனியரசு.. திமுக கூட்டணிக்கு முடிவா?

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, EPS-ஐ சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள EPS-ன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுக கூட்டணியில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அதனால் அங்கிருந்து வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய தனியரசு இசைவு தெரிவித்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.
News January 19, 2026
பீர் குடித்தால் கிட்னி ஸ்டோன் கரையுமா?

பீர் குடித்தால் சிறுநீரக கற்கள் வெளியேற வாய்ப்புள்ளது என்றாலும் அது சரியான முறை அல்ல என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிப்பதால் அதிக சிறுநீர் வெளியேறும்போது அதனுடன் சிறுநீரகத்தில் இருக்கும் சிறிய (<5 mm) கற்களும் வெளியேறும். ஆனால், பெரிய கற்கள் வெளியேறாது. அதேநேரம், பீர் அதிகம் குடிப்பது புதிய கற்களை உருவாகவும், முன்னரே கற்கள் இருந்தால், வலி அதிகரிக்கவும் காரணமாகும் என்று எச்சரிக்கின்றனர்.
News January 19, 2026
BREAKING: டெல்லியில் விஜய்.. CBI குறுக்கு விசாரணை!

CBI வளையத்தில் சிக்கியுள்ள விஜய், சற்றுமுன் டெல்லியில் உள்ள அலுவலகத்தில் 2-வது நாளாக ஆஜராகியுள்ளார். கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கில் கடந்த 12-ம் தேதி விஜய் அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக இன்று குறுக்கு விசாரணையை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே தவெக நிர்வாகிகள் அளித்த தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது விஜய்க்கு பெரும் சிக்கலாக மாற வாய்ப்புள்ளது.


