News August 16, 2024
அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் CBSE உத்தரவு

தேசிய கல்வி பாடத் திட்டத்தை (NCERT) 9-12ம் வகுப்பு வரை கட்டாயமாக்கி CBSE பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அப்பள்ளிகளுக்கு CBSE அனுப்பியுள்ள உத்தரவில், இந்த கல்வியாண்டு முதல் 9-12 வகுப்புகளில் NCERT குழு உருவாக்கிய புத்தகங்களை பயன்படுத்துவது கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 1-7 வகுப்புகள், அந்த நூல்களை பயன்படுத்துவது ஊக்குவிக்கப் படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News August 17, 2025
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு குவியும் வாழ்த்து!

துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகளாக அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் தனித்துவமாக அறியப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வாகவிருப்பது பெரும் மகிழ்ச்சி என அண்ணாமலை தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
News August 17, 2025
₹200 கோடி சம்பளம் தராததால் அஜித் எடுத்த முடிவு

‘AK 64’ படத்தில் நடிக்க அஜித் ₹200 கோடி சம்பளம் கேட்டதால், சில தயாரிப்பாளர்கள் பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், பட விநியோகஸ்தர் ராகுல் அப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். ஆனால், அஜித் கேட்ட தொகையை தர முடியாது என்பதால், இருவரும் ஒரு புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதாவது டிவி, OTT உரிமம் விற்பனையாகும் தொகை அஜித்துக்கு, தியேட்டர் வசூல் தயாரிப்பாளருக்கு என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாம்.
News August 17, 2025
ஒடிஷா முன்னாள் CM ஹாஸ்பிடலில் அனுமதி

ஒடிஷா முன்னாள் முதல்வரும், BJD கட்சி தலைவருமான நவீன் பட்நாயக் (78) ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னைகள் காரணமாக அட்மிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை ஹாஸ்பிடல் விரைவில் வெளியிடும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமானதால், டாக்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தனர்.