News June 27, 2024
உண்மையை கண்டறியவே சிபிஐ விசாரணை: ஜெயக்குமார்

கள்ளச்சாராய உயிரிழப்பில் உண்மை நிலவரத்தை கண்டறியவே சிபிஐ விசாரணை கேட்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களே விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்ற அவர், அதிகார வர்க்கத்தில் உள்ள நபர்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை கோருவதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News December 3, 2025
BREAKING: இரவில் சந்திப்பு… மீண்டும் இணைகிறாரா OPS?

டெல்லிக்கு OPS சென்றுள்ள நிலையில், அவருக்கு பின்னாடியே குருமூர்த்தியும் விரைந்துள்ளார். இருவரும் நள்ளிரவில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியை தொடங்குவதற்காக OPS டெல்லிக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் NDA கூட்டணியில் இணைவது குறித்து நட்டாவை சந்தித்து பேசவிருக்கிறாராம். ஒருவேளை ஓபிஎஸ் NDA கூட்டணிக்கு வந்தால், EPS எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்துவார் என கேள்வி எழுந்துள்ளது.
News December 3, 2025
ஐரோப்பாவுடன் போர் செய்ய ரெடி: புடின்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த USA போட்ட டீல் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக ஐரோப்பா விமர்சித்திருந்தது. இதனால் அதில் சில மாற்றங்களை செய்திருந்தது USA. இதனால் கடுப்பான புடின், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வரையறுக்க USA-வை ஐரோப்பாவை தூண்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவுடன் போர்புரியும் எண்ணம் இல்லை என்ற அவர், ஆனால் போர்தான் வேண்டுமென்றால் அதற்கும் ரெடி என எச்சரித்துள்ளார்.
News December 3, 2025
கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


