News June 25, 2024
மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் எஸ்.பி.வினோத் குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில், இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 150க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
டைரக்ஷன் – பாஜக, நடிப்பு – விஜய்: தனியரசு

விஜய் பாஜகவின் செல்லப்பிள்ளையாக செயல்படுவதாக Ex. MLA தனியரசு விமர்சித்துள்ளார். விஜய் ஒரு நடிகர் மட்டும்தான் என்ற அவர், விஜய்யின் அரசியல் செயல்பாடுகளுக்கான கதை, திரைக்கதை, இயக்கத்தை பாஜகவே கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவின் இடத்தை பிடிக்க விஜய்யை முன்னிறுத்தும் வேலைகளை பாஜக செய்து வருவதாகவும், அதற்காகவே செங்கோட்டையனை அங்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News January 5, 2026
பொங்கல் பரிசு தொகுப்பு.. CM ரங்கசாமி வழங்கினார்

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 4 கிலோ பச்சரிசி, 1 கிலோ நாட்டு சர்க்கரை, 1 கிலோ பருப்பு உள்பட தலா ₹750 மதிப்புள்ள பொருள்களை மக்களுக்கு வழங்கி, CM ரங்கசாமி திட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. TN-ல் ₹3,000 ரொக்கத்துடன் பச்சரிசி உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகத்தை ஜன.8-ல் CM ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
News January 5, 2026
தவாகவில் இருந்து தவெகவுக்கு தாவுகிறார்!

தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து வெளியேறிய ஜெகதீச பாண்டியன் தவெகவில் இணையவுள்ளார். நாதகவில் இருந்து வெளியேறி தவாகவில் இணைந்த இவர், சீமானை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தமிழ் தேசியம் பேசுவதால் சீமானை நண்பனாக கருதும் வேல்முருகனுக்கு இது பிடிக்காததால், விமர்சிக்க வேண்டாம் என ஜெகதீசனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு அவர் உடன்பட மறுத்து இந்த முடிவை எடுத்துள்ளார்.


