News April 27, 2024

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

image

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது. 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்களிக்கவும் ஐகோர்ட்டில் அவர் வழக்குத் தொடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததால், வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து, கைது செய்ய போலீஸ் களமிறங்கியுள்ளது.

Similar News

News November 17, 2025

விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

image

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்‌ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.

டிஜிட்டல் அரெஸ்ட்.. ₹31.8 கோடி அபேஸ்

image

பெங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் சிக்கி ₹31.8 கோடியை இழந்துள்ளார். பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு கொரியர் வந்திருப்பதாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் ஒரு அழைப்பு வந்துள்ளது. பின்னர், தொடர்பில் வந்த குற்றவாளிகள், அவரை, தொடர்ந்து 6 மாத காலம் மிரட்டி, கொஞ்சம், கொஞ்சமாக பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து, அந்த பெண் புகார் அளித்த பின்னரே, மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

error: Content is protected !!