News April 1, 2025
‘காவிரி – வைகை – குண்டாறு’ எங்கள் பிள்ளை: துரைமுருகன்

காவிரி – வைகை – குண்டாறு திட்டம் நாங்கள் பெற்ற பிள்ளை அதனை ஒருபோதும் கைவிட மாட்டோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பேரவையில், MLA சி.விஜயபாஸ்கர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய அவர், இத்திட்டத்திற்காக இதுவரை ₹288 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கூறினார். 2008இல் கருணாநிதி முன்மொழிந்த இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிப்போம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ மொழி, கலாச்சாரத்தை தாண்டி பல மக்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து அவர் அடுத்த PAN இண்டியன் படத்தை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் கலாச்சாரம் சார்ந்த படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபோக, தற்போது பிரசாந்த் வர்மாவின் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் ஹனுமன் வேடத்தில் ரிஷப் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
பொதுக்குழுவில் EPS-க்கு முழு அதிகாரம்

டிச.10-ல் நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அனைத்து அதிகாரமும் EPS-க்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கவும் முடிவெடுக்கப்படவுள்ளது. மேலும், கட்சி வளர்ச்சிப் பணிகள், தேர்தலுக்கு தயாராவது, ஐடி விங் செயல்பாடுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
News November 24, 2025
கடைசி நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியால் 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறை அளிக்காத மாவட்டங்களில் மாணவர்கள் பள்ளிக்கு கிளம்ப தொடங்கிவிட்டனர். இந்நிலையில், கடைசி நேரத்தில் 18-வது மாவட்டமாக சேலத்தில் உள்ள பெத்தநாயக்கன் பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


