News May 14, 2024
மே 21இல் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

தமிழ்நாட்டிற்கு கர்நாடகா உரிய நீர் திறக்காத நிலையில், டெல்லியில் மே 21ஆம் தேதி எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. மேட்டூர் அணையில் 50 அடிக்கு மட்டுமே நீர் உள்ளதால், டெல்டா விவசாயிகளுக்கு நீர் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் கர்நாடகாவும் நீர் திறக்க மறுப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 7, 2025
திருடியதாக ஒப்புக் கொள் என அஜித் மீது கொடூர தாக்குதல்

அஜித் வழக்கில் திருத்தப்பட்ட FIR-ல் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகை திருடியதாக அவர் ஒத்துக்கொள்வாரென போலீஸ் எண்ணினர். ஆனால், அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை. அதனால், உயிர் போகும் அளவிற்கு அடித்து கொடுமை செய்துள்ளனர். தற்போது, வழக்கில் புகார்தாரராக அஜித்தின் தம்பி நவீன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தனிப்படை டிரைவர் ராமச்சந்திரனின் பெயர் விடுவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
என்னை விடுங்கள், போகிறேன் RR-யிடம் சஞ்சு பேச்சு?

வரும் IPL-ல் சஞ்சு சாம்சன் RR அணியை விட்டு விலகி CSK-ல் இணையவுள்ளார் என தகவல்கள் அண்மையில் பரவின. பயிற்சியாளர் டிராவிட்டுடன் ஏற்பட்ட மனக்கசப்பே சஞ்சுவின் வெளியேற்றத்துக்கு காரணமென கூறப்பட்டது. இந்நிலையில் வரும் IPL மினி ஏலத்துக்கு முன்பு தன்னை RR அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் அல்லது Trade செய்ய அனுமதிக்க வேண்டும் என RR நிர்வாகத்திடம் சாம்சன் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
News August 7, 2025
அதிமுக தலைமை மீது ராஜேந்திர பாலாஜி வருத்தம்?

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வராததால் ராஜேந்திர பாலாஜி வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த லோக் சபா தேர்தலில் விருதுநகரில் தேமுதிக தோற்றாலும், சுமார் 3.80 லட்சம் வாக்குகள் பெற்றது. தமிழகத்திலேயே தேமுதிகவுக்கு அதிக வாக்குகள் இங்கு தான் கிடைத்தது. கூட்டணியில் தேமுதிக இருந்தால் சிவகாசியில் போட்டியிட தனக்கு உதவியாகயிருக்கும், அதுவே திமுகவுக்கு சென்றால் பாதகமாகவும் என வருந்துகிறாராம்.