News July 24, 2024
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடக்கம்

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பாக, கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கூட்டத்தில் ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா அரசு ஏற்கவில்லை.
Similar News
News March 5, 2026
எரிவாயு விநியோகத்தை குறைக்க முடிவு: GAIL

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக GAIL நிறுவனம் தெரிவித்துள்ளது. கத்தாரில் இருந்து இந்தியா ஆண்டுதோறும் பெருமளவு LNG எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. தற்போது ஹார்முஸ் நீரிணை மூடல், போர் தாக்கம் காரணமாக இறக்குமதி தடைபட்டுள்ள நிலையில், தங்களது LNG எரிவாயு விநியோகத்தை குறைக்க உள்ளதாக GAIL அறிவித்துள்ளது.
News March 5, 2026
கையாலாகாத பொம்மை CM ஸ்டாலின்: EPS

சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய CM, ஒரு கையாலாகாத பொம்மை CM-மாக இருப்பதாக EPS விமர்சித்துள்ளார். நாங்குநேரி கொலை சம்பவத்தின் ரத்த ஈரம் காய்வதற்குள் இடைக்காட்டூரில் மற்றொரு கொலை நடந்துள்ளதாக கூறிய அவர், அரசை கண்டு குற்றவாளிகள் பயப்படவில்லை என்றார். மேலும், பட்டியலின மக்கள் பகுதியில் தாக்குதல் நடக்கிறது என்றால், திமுக இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிறது என்று தானே அர்த்தம் எனவும் கேட்டுள்ளார்.
News March 5, 2026
BREAKING: மேற்குவங்க கவர்னர் திடீர் ராஜினாமா

மேற்குவங்க கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த போஸ் அறிவித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து மோதல்போக்கை கடைபிடித்துவந்த அவர், ஓரிரு மாதங்களில் பதவிக் காலம் முடிவடையவிருந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு ஆனந்த போஸ் அனுப்பியுள்ளார். மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கவர்னர் பதவி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


