India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் 4 நாட்களாக மொத்தம் 1907 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் மொத்தம் 47,392 மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக மாவட்டத்தில் பெயர் சேர்த்தல் 29, 744 மனுக்களும், பெயர் நீக்குதலுக்கு 2,784 மனுக்களும், திருத்தம் செய்வதற்கு 14,833 மனுக்களும், ஆதார் அங்கீகாரம் செய்வதற்கு 31 மனுக்களும் என மொத்தம் 47,392 மனுக்கள் பெறப்பட்டன.
வெளி மாநிலத்திலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் அவர்கள் பணி புரியும் இடத்திலேயே தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தெரிவித்துள்ளார். இதில் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தொழிலாளர்களின் ஆதார் எண் மற்றும் தற்போதைய தொலைபேசி எண்ணையும் இணைக்கலாம் என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைப்பேட்டைத் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ்(45). இவர் அந்த பகுதியில் உள்ள தெருவில் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் பிரகாஷ்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
வணிக நிறுவன கட்டிட வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதை திரும்ப பெற கோரி நாளை விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தாலுகா வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதே நேரம் சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்காமல் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நான்கு நாட்களாக சாரல் மழை மற்றும் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவுவதால் சிவகாசியின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியான சூழலில் பட்டாசு உற்பத்தி பணிகள் மேற்கொள்ள முடியாது என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பட்டாசு ஆலைகளும் தொடர்ந்து 4வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நாளை கார்த்திகை மாத பிரதோஷம் & நவ.30 அமாவாசை வழிபாடும் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு நாளை(நவ.28) முதல் டிச.01 வரை 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், சதுரகிரியில் சாரல் மழை பெய்வதால் சுவாமி தரிசனம் செய்ய அந்தந்த நாட்களின் காலையில் பெய்யும் மழையை பொறுத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.
வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதனால், தமிழகத்தில் பல பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த மனுதாரருக்கு பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தின் சார்பில் ரூபாய் 6000 மதிப்புள்ள தையல் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட சுள்ளங்குடியில் தற்காலிக ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சுள்ளங்குடி கிராமத்தில் உள்ள நாடக மேடையில் தற்காலிக ரேஷன் கடை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.