India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
விருதுநகர் மாவட்டம், மல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டி.மானகசேரி காலனியில் திருத்தங்கல் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் கட்டடத்தில் உரிமம் மற்றும் விதிகள் மீறி பட்டாசுகள் அடங்கிய பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து பட்டாசுகள் பெட்டியை பறிமுதல் செய்து மூர்த்தி மீது வழக்குபதிவு செய்து விசாரணை.
விருதுநகர், சிவகாசியில் பாமக (மருத்துவர் ராமதாஸ்) சார்பாக பாமக மாநில இணைப் பொதுச்செயலாளர் அருளை மாநில செய்தி தொடர்பாளராக நியமனம் செய்த பா.ம.க நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் -க்கு நன்றி தெரிவித்து விருதுநகர் மாவட்ட செயலாளர் டேனியல் சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் அன்புமனி புகைப்படம் இல்லாமலும், ஸ்ரீ காந்தி புகைப்படத்துடனும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <
அல்லம்பட்டியை சேர்ந்த யோகராஜ் (34), தமிழரசன் (18), சுந்தர் (22), சதாம் உசேன் ஆகிய 4 பேரும் காரில் அருப்புக்கோட்டை நோக்கி சென்றபோது, விருதுநகர் சாலையில் புதிய ரவுண்டானா அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. காரை ஓட்டிவந்த யோகராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். இதுக்குறித்து டவுன் போலீசார் விசாரணை.
அருப்புக்கோட்டை புளியம்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் நவராத்திரி கொலு உற்சவ விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.28) விழாவின் ஏழாம் நாள் நிகழ்ச்சியாக அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்.
விருதுநகர் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <
அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டி அருகே இன்று (செப். 28) அதிகாலை கார் விபத்தில் அல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த யோகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அருப்புக்கோட்டை நகர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th, டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் – ரூ.12,000 – ரூ.35,000 வரை. அக். 14க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் நீட்டிப்பு செய்யப்படும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. SHARE பண்ணுங்க
விருதுநகர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.