India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மேட்டமலை குடியிருப்பு பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட மண்டல வருவாய் அலுவலர் ஆகியோர் பரிசீலித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள் சாமி என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைக்கப்பட்டுள்ளது.
சாத்துார் அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் 2021 பிப். 12 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 27 பேர் பலியாகினர். இதில் 26 பேர் வரை காயமடைந்தனர். 2022 இல் பசுமை தீர்ப்பாயம் பலியானவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20 லட்சம், காயமடைந்தவர்களுக்கு சதவீதங்களுக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தாததால் பாதிக்கப்பட்டோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, 2ம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, 3ம் தொகுப்பு ஏப்.29 – மே11, 4ம் தொகுப்பு மே.13 – மே.25, 5ம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 9751393412 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பைக்கில் மாடசாமி என்பவரை ஏற்றிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலையில் தனியார் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மாரியப்பன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சந்திரசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 2023-24 ஆண்டில் நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 4,129 குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்து மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மேலும், 2023-24ம் ஆண்டில் மாநில அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற குடும்பநல அறுவை சிகிச்சைகளில் 354 பெண்களுக்கு குடும்பநல அறுவை சிகிச்சைகள் செய்து கன்னிசேரி புதூர் ஆரம்ப சுகாதார நிலையம் 2ம் பிடித்தது.
தமிழ்நாட்டில் அவ்வப்போது பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் மாவட்டங்களான விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதிகளில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணவும்..
விருதுநகர் மாவட்டத்துல ஆளில்லாத ஒரு அமானுஷ்ய கிராமம் இருக்குன்னு சொன்னா அத நம்புவீங்களா? ஆமாங்க.. திருச்சுழி பக்கத்துல குச்சம்பட்டி அப்டிங்கிர ஒரு கிராமம். இங்க ஒரு வயதான தம்பதிய தவிர, வேற யாருமே இங்க இல்ல. ஆனா, முன்னாடி வாழ்ந்தவங்களோட வீடுகள் சிதிலமடைஞ்சு இருக்குறத பாக்க முடியும். இங்க சரியான வேலை இல்லாததால, இந்த கிராமத்த விட்டு போனதா சொல்றாங்க அந்த வயதான தம்பதி. கேக்கவே வித்தியாசமா இருக்குல.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்றுடன் பிளஸ் டூ தேர்வுகள் நிறைவு பெற்றது. இதில் இயற்பியல் தேர்வில் 13,745 பேர் விண்ணப்பித்த நிலையில் 13,630 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினர். இதில் 115 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதே போல் பொருளியல் தேர்வில் 7,289 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 7,140 பேர் மட்டுமே தேர்வு எழுதினார். 149 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
சென்னல்குடியை சேர்ந்த கருப்பசாமி(67), கேரளாவை சேர்ந்த விஷ்ணு(24) ஆகியோர் வச்சகாரப்பட்டி அருகே உள்ள தனியார் புளுமெட்டலில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் கருப்பசாமி கத்தியால் விஷ்ணுவை தாக்கி கொலை செய்ததற்காக 7.9.2020 அன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் கருப்பசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.6500 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஏப்.8 அன்று பங்குனி பொங்கல் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்.15 பொங்கல் விழாவும், ஏப்.16 அக்னி சட்டி, பூக்குழி விழாவும், ஏப்.17 திருத்தேர் மற்றும் ஏப்.18 பூ பல்லாக்கு நிகழ்வும் நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.