Virudunagar

News April 11, 2025

விருதுநகரில் குற்ற சம்பவம் குறித்து புகார் அளிக்க எண் வெளியீடு

image

சிவகாசி, நாரணாபுரத்தில் சிசிடிவி கேமராவுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர் விருதுநகர் மாவட்டம் முழுவதும் 8,135 சிசிடிவி பொருத்தப்பட்டு குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் குற்ற சம்பவம் தொடர்பாக தனது 9940277199 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும், புகார் தாரரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

News April 11, 2025

விருதுநகரில் 273 சமையல் உதவியாளர் பணியிடங்கள்

image

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 273 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. ஊதியமாக ரூ.3000-9000 வரை வழங்கப்படும். இதில் 10-ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி பெற்ற 18- 40 வயதிற்குட்பட்டவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏப்.24 க்குள் சமர்பிக்க வேண்டும்

News April 11, 2025

நிறுத்தப்படும் வெம்பக்கோட்டை அகழாய்வு

image

வெம்பக்கோட்டையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் துவங்கி தற்போது 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. நுண் கற்காலத்தை அறியும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த அகழாய்வில் நுண்கற்காலம் சார்ந்த தொல்பொருட்கள் இதுவரை கிடைக்காததால் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வதற்கான திட்டம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

News April 11, 2025

விருதுநகரில் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறப்பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News April 11, 2025

திருப்பதியில் இருந்து பெருமாள் சூடிய பட்டு வஸ்திரம் வருகை

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஏப்.3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையொட்டி,நாளை காலை செப்பு தேரோட்டமும்,மாலை 5:30 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.திருக்கல்யாண வைபவத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள் சூடிய பட்டு வஸ்திரம்,மாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஸ்ரீவி.கொண்டுவரப்பட்டு கோயில் செயல் அலுவலரிடம் வழங்கினர்.

News April 11, 2025

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

image

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(45). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த சீனிவாசன் உடையநாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 11, 2025

கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் சேவையாக அறிவிப்பு

image

கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்த பெரும் வரவேற்பு பெற்ற திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் சிறப்பு ரயில் சேவை கோடைகால வாராந்திர சிறப்பு ரயில் சேவையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த இரயில் சேவை தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை ஆகிய மார்கத்தில் வழியாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் இச்சேவை இயக்கப்படுகிறது.

News April 11, 2025

பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் சிஎஸ்ஐ துவக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி பணியிடை மரணம் அடைந்த முருகமணி என்பவரின் வாரிசுதாரராக அவரது மகள் எஸ்தர் சுகிர்தா என்பவருக்கு விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடத்திற்கான கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை ஆட்சியர் ஜெயசீலன் வழங்கினார்.

News April 10, 2025

விருதுநகர் எழுத்தாளருக்கு விருது

image

பாரதிய பாஷா விருது என்பது இந்திய இலக்கியத்திற்கான பங்களிப்பினை கௌரவிக்கும் வகையில் கொடுக்கப்படும் விருது. மேலும் இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்படும். தற்போது இந்த விருதானது நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கபடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.

News April 10, 2025

ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு நாளை திருக்கல்யாணம்

image

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்,ரெங்கமான்னார் திருக்கல்யாண திருவிழா கோலகலமாக ஏப்.3 அன்று கருட கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் வீதி உலா வந்து வெவ்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனையடுத்து நாளை காலை 7.5 க்குசெப்பு தேரோட்டமும், மாலை 6.30 முதல் 7.30 க்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!