India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் 2,033 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பராமரிக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளில் 247 கிலோமீட்டர் சாலைகள் ரூ.261 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.314 கோடி மதிப்பில் 138 தரைப்பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், முதலமைச்சர் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகரில் கள ஆய்வு நடத்த 2 நாள் பயணமாக வருகை தந்த முதல்வர் மு.க ஸ்டாலின் கட்சி வளர்ச்சி குறித்தும், 2026தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்தும் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் 7-வது முறையாகத் திமுக ஆட்சி அமைக்க விருதுநகரின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்றுத் தருவோம் என நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதியளித்தார்கள்”என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தள பதிவிட்டுள்ளார்.
விருதுநகரில் முதல்வர் கட்சி வளர்ச்சி குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தல் களப்பணி குறித்தும் ஆலோசனை நடத்தினார். 2026 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கட்சி நிர்வாகிகளின் கள செயல்பாடுகளை டேட்டாவுடன் கையில் வைத்துக் கொண்டு கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. 7 -வது முறையாக திமுக ஆட்சி அமைக்க விருதுநகரில் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தருவோம் என நிர்வாகிகள் உறுதியளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகர் சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ஆய்வு மேற்கொள்ளச் சென்ற வழியில் காப்பகத்தில் தங்கி உள்ள மாணவர்களுக்கு வழங்குவதற்காக சூலக்கரை மேட்டில் உள்ள பேக்கரிக்கு சென்று கேக் மற்றும் பிஸ்கட்டுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாங்கினார். முதலமைச்சர் கேக் வாங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விருதுநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வர் தலைமையில் திமுக கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணியை உடைக்க கடும் முயற்சி நடைபெற்று வருகிறது. அதை பற்றியும் புதிதாக கட்சி துவங்கியவர்களை பற்றி எதுவும் யோசிக்காமல் நீங்கள் களப்பணி ஆற்றுங்கள் அதனை நாங்கள் பார்த்து கொள்கிறோம். பலமான கூட்டணி உள்ளதால் 2026 நாம் வெற்றி பெறுவோம் என முதல்வர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினாலான மணி நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, தங்க மணி அமைந்துள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவி அருகே டி.மானகசேரி பகுதியைச் சேர்ந்த பால்சாமி(55),வைரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை பைக்கில் மானகசேரியில் இருந்து சிவகாசி – ஸ்ரீவி சாலையில் கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிவகாசியில் இருந்து ஸ்ரீவிக்கு வந்த தனியார் பேருந்து இவர்கள் மீது மோதியதில் பால்சாமி சம்பவ இடத்திலே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த வைரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாளர் பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டு சுமார் 6000 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு உற்பத்தி பணிகள் இன்று வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பூஜைகளுடன் துவங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் இன்று சிறப்பு பூஜை செய்து பணிகளை துவக்கி உள்ளனர்.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பழைய நீதிமன்றம் அருகே பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு Way2 இல் செய்தி வெளியிடப்பட்டது. இதுகுறித்தான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலை துறையினர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்துள்ளனர். இதனால் வாகன ஒட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.