India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பட்டம்புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அதில் விருதுநகர் நகராட்சியில் ரூ.25 கோடி, அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.10.50 கோடி, காரியாபட்டி நகரத்தில் ரூ.12 கோடியில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அறித்துள்ளார்.
விருதுநகரில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க ஆட்சியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பத்தை நேற்று மாலை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கொடி கம்பம் மின் கம்பியில் உரசியதில் பணியில் ஈடுபட்ட நாராயணசாமி, சக்திவேல், நவீன் குமார் ஆகியோர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். தற்போது இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சூலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் இன்று(நவ.11) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகள் தினம் நவம்பர் 14 முன்னிட்டு காலை 9 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ‘குழந்தைகளுக்கான நடை’ என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கையெழுத்து பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே நேற்று பட்டாசு ஆலையில் கள ஆய்வு மேற்கொள்ள வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒரே நாளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியது பட்டாசு தொழிலாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பட்டம்புதூரில் இன்று முதல்வர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பேசிய முதல்வர் அருப்புக்கோட்டையில் ரூ.350 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா,விருதுநகர் நகராட்சியில் ரூ.24 கோடியில் சாலை, மழைநீர் வடிகால், சிவகாசி மாநகராட்சியில் ரூ.50 கோடியில் சாலை, மழைநீர் வடிகால், அருப்புக்கோட்டை, ராஜபாளையம் நகராட்சியில் ரூ.16 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முடிவுற்ற 34 பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அதில் பேசிய முதல்வர் வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பூங்காவை சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விருதுநகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சார்பில் ரூ.417 கோடியே 21 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57,556 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் ரூ.77 கோடியே 12 லட்சம் மதிப்பிலான புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமுதாயக்கூடம், நியாய விலை கடை கட்டிடம் உள்ளிட்ட 98 கோடியே 47 லட்சம் மதிப்பிலான 35 கட்டிடங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2,033 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத்துறை மூலமாக பராமரிக்கப்பட்டும், கடந்த 3 ஆண்டுகளில் 247 கிலோமீட்டர் சாலைகள் ரூ.261 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.314 கோடி மதிப்பில் 138 தரைப்பாலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், முதலமைச்சர் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.