Virudunagar

News October 7, 2025

சிவகாசியில் செயின் திருடிய காதலி கைது

image

கோவையை சேர்ந்த நாகராஜ் (44) சிவகாசியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்துராஜபுரத்தை சேர்ந்த கடல்கன்னி (34) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடல்கன்னி வீட்டிற்கு சென்ற இவஎ அவரது தோழி முருகேஸ்வரி, மணிகண்டகார்த்திக் (18) ஆகியோருடன் மது அருந்திவிட்டு போதையில் அங்கு தூங்கிய நாகராஜ் அணிந்திருந்த 6 பவுன் நகையை மூவரும் திருடினர். இதில் கடல்கன்னி, முருகேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 7, 2025

விருதுநகரில் பேருந்து மோதியதில் பெண் பலி

image

விருதுநகர் ஆத்துமேடு கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரும், இவருடைய மகளும் வெளியூர் சென்று விட்டு விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போ அவ்வழியாக சென்ற தனியார் பேருந்து பரமேஸ்வரி மீது மோதியது. இதில் பரமேஸ்வரி படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து பஜார் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 6, 2025

விருதுநகர்: NLC நிறுவனத்தில் 1101 காலியிடங்கள்., APPLY NOW

image

விருதுநகர் மக்களே, தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் 1101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI மற்றும் அறிவியல் துறை சார்ந்த டிகிரி முடித்தவர்கள் 21.10.2025 ம் தேதிக்குள் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பயனுள்ள தகவலை கண்டிப்பா உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 6, 2025

விருதுநகரில் கடன் உதவித் தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடர விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வாயிலாக கடன் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பங்களை www.tabcedco.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News October 6, 2025

அருப்புக்கோட்டையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் அக்.11 அன்று 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில் விருதுநகர் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில் பங்கேற்கும் நிறுவனங்கள், ஊதிய விரங்களை <>இங்கே கிளிக் செய்து<<>> தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8072491078, 9360171161 என்ற எண்ணை அழைக்கலாம்.

News October 6, 2025

விருதுநகரில் யோகா பயிற்றுநர் பதவி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு யோகா பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், தகவலை அறிந்து கொள்ள 04562-225947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News October 6, 2025

விருதுநகரில் யோகா பயிற்றுநர் பதவி

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு யோகா பயிற்றுநர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு அதிலிருந்து தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், தகவலை அறிந்து கொள்ள 04562-225947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

News October 5, 2025

விருதுநகர் அருகே பட்டாசு தயாரித்தவர் கைது

image

விருதுநகர் சூலக்கரை போலீசார் குல்லூர் சந்தை சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காளிராஜ் என்பவர் பேன்சி ரக வெடி தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருட்கள் மற்றும் பட்டாசுகளை பறிமுதல் செய்த சூலக்கரை காவல்துறையினர் காளிராஜை கைது செய்தனர்.

News October 5, 2025

விருதுநகர்: PHH / AAY ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே மத்திய அரசின் (PMGKAY) என்ற திட்டத்தின் மூலமாக வறுமை கோட்டின் கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக 5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கபடுகிறது. இதை பெறுவதற்க்கு AAY PHH அட்டைதாரர்களாக இருக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க வேண்டிய அவசியமில்லை. உங்க ரேஷன் கடையில் கை ரேகை, கண் விழியை பதிவு செய்து இலவசமாக பெறலாம்..அட்டை இருந்தும் வழங்கவில்லை என்றால் 18004255901 புகார் தெரிவியுங்க.. SHARE பண்ணுங்க..

News October 5, 2025

விருதுநகர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <>இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, விருதுநகர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

error: Content is protected !!