Virudunagar

News October 8, 2025

அருப்புக்கோட்டையில் பேருந்து கட்டணம் உயர்வு?

image

மதுரையில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை – மதுரைக்கு ரூ.40 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.50 வசூலிக்கப்படுகிறது. எலியார்பத்தி சுங்கச்சாவடியில் பேருந்துகளுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் புகார் எழுந்த நிலையில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News October 8, 2025

சிவகாசி டி.எஸ்.பி அதிரடி மாற்றம்!

image

சிவகாசி டி.எஸ்.பி பாஸ்கரன் தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிவகாசி டி.எஸ்.பியாக பணியாற்றி வந்த இவர் தற்போது விழுப்புரம் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பியாக பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். சிவகாசிக்கு விரைவில் புதிய டி.எஸ்.பி நியமிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 8, 2025

விருதுநகர் மக்களே கேஸ் மானியம் வேண்டுமா?

image

விருதுநகர் மக்களே, உங்க ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியலையா? முதலில் ஆதார் எண், வங்கி கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். பின்னர் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குக்கு வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை எல்லோர்க்கும் SHARE பண்ணி உதவுங்க.!

News October 8, 2025

சிவகாசி நிர்வாகிகளை சந்தித்த மு.க. ஸ்டாலின்

image

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை ஜூன்.13 முதல் நேரில் சந்தித்து வருகிறார். அதில் நேற்று சிவகாசி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை தனித்தனியே அழைத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இதில் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

News October 8, 2025

புரட்டாசி பிரம்மோற்சவ புஷ்ப யாகத்துடன் நிறைவு

image

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசாயி(பெரிய பெருமாள்) அவதரித்த புரட்டாசி பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் செப்.29 அன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரியபெருமாள் திருக்கல்யாணம், 30-ம் தேதி சயன சேவையும், அக்.1-ம் தேதி முக்கிய விழாவான செப்பு தேரோட்டம் நடைபெற்றது. நேற்று பெரிய பெருமாள் சன்னதியில் புஷ்ப யாகத்துடன் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

News October 7, 2025

BREAKING விருதுநகருக்கு கனமழை எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT

News October 7, 2025

சிவகாசியில் இரவில் பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி உட்கோட்டத்தில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் மற்றும் போலீசார் பட்டாசு ஆலைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது புலிப்பாறைப்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் அனுமதி அளிக்காத இடத்தில் தொழிலாளர்கள் அமர்ந்து இரவு நேரத்தில் புஸ்வானம் பட்டாசை உற்பத்தி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பட்டாசு ஆலை நிர்வாகி பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

News October 7, 2025

சதுரகிரியில் பக்தர் மூச்சு திணறி பலி

image

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி மகா(55). இவர்  குடும்பத்தினருடன் புரட்டாசி மாத பௌர்ணமி வழிபாட்டிற்காக சதுரகிரி வந்தார். சதுரகிரி மலைப்பாதையில் சின்ன பசுக்கிடை – இரட்டை லிங்கம் இடையே மலையேறிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாப்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News October 7, 2025

சாத்தூர் முன்னாள் MLA ஆள் கடத்தில் வழக்கில் தடை இல்லை

image

சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உட்பட 6 பேர் சேர்ந்து ரூ.2 கோடி கேட்டு தன்னை கடத்தியதாக சிவகாசி ரவிச்சந்திரன் ஸ்ரீவி நீதி மன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ததால் ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜவர்மன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி விசாரணை நவ.4 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

News October 7, 2025

விருதுநகர்: ஆசிரியர் உட்பட 7,267 காலிப்பணியிடம் அறிவிப்பு

image

விருதுநகர் மக்களே; Ministry of Tribal Affairs கீழ் செயல்படும் (EMRS) பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்காக மொத்தம் 7,267 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு முதல் B.ED வரை படித்த விண்ணப்பதாரர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தகுதிகேற்ப 18,000 முதல் 2,00,000 வரை சம்பளம் வழங்கப்படும் (விண்ணப்பிக்க கடைசி நாள் அக்.23) *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!